search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் பலி"

    குழித்துறை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    குழித்துறையை அடுத்த நட்டாலம் வாத்தியார் விளையைச் சேர்ந்தவர் ராஜேஷ், (வயது 35).

    ராஜேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரது ஆட்டோ, இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கக்குளம் கரையில் குளத்தையொட்டி நின்றது.

    இன்று அதிகாலை குளத்திற்கு குளிக்க சென்றவர்கள் குளத்தின் கரை அருகே ஆட்டோ ஒன்று அனாதையாக நிற்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது குளத்திற்குள் ராஜேஷ் பிணமாக மிதப்பதை கண்டனர்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழித்துறை தீயணைப்பு வீரர்களை வரவழைத்து குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டனர். மீட்கப்பட்ட ராஜேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராஜேஷ் குளத்தில் மூழ்கி இறந்தது எப்படி? என்பது பற்றி மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஷ் மது போதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொன்று உடலை குளத்தில் வீசிச்சென்றார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று நட்டாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாயல்குடி அருகே மோட்டர் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது சேக்தாவூது (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று ஓப்பிலானை சேர்ந்த நண்பர் முகமது நிலா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மலட்டாறு விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ராமேசுவரம் நோக்கி சென்ற கார் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. மின்னல் வேகத்தில் வந்த கார் முகமது சேக்தாவூத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சேக்தாவூது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய முகமது நிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து முகமது சேக்தாவூது மனைவி பாத்திமா சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப் பதிவு செய்து கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் மோகன்குமார் (29) என்பவரை கைது செய்தார்.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தறிகெட்டு ஓடிய பள்ளி வேன் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ஒரு தனியார் பள்ளி வேன் இன்று காலை பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது. கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே வேன் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

    இதை பார்த்த பொது மக்கள் அலறியடித்து ஓடினார்கள். அங்கும் இங்குமாக ஓடிய வேன் ரோட்டோரம் நின்ற 3 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோக்கள் நொறுங்கி சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த டிரைவர் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது40) என்பவர் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த சம்பவத்தின் போது சாலையோரம் நின்ற நாகலாபுரம் புதூரை சேர்ந்த துப்புரவு தொழிலாளி மாரிச்சாமி, சுப்பிரமணியபுரம் சுப்பிரமணியன், பழக்கடைக்காரர் கோவிந்தராஜ், கட்டிட தொழிலாளிகள் கண்ணன், செல்வக்குமார் ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் திரண்ட மக்கள் கூட்டம்.

    இதில் கோவிந்தராஜ், கண்ணன், செல்வகுமார் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள். பலியான தங்கராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தனியார் பள்ளி வேன் டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    திருமங்கலத்தில் பட்டாசு வெடித்து ஆட்டோ டிரைவர் பலி கல்லூரி மாணவர் படுகாயம்

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரை சேரந்தவர் சிலம்பரசன். இவரது மகனுக்கு திருமங்கலம் நகரில் உள்ள ஒரு கல்யாண மகாலில் காதணி விழா நடத்தினார்.

    அப்போது சீர்வரிசை கொண்டு வந்தபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகில் உள்ள வெள்ளைக் கல்லை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (வயது 35), கல்லூரி மாணவர் முத்து முனியாண்டி (18) ஆகியோர் தங்கள் கைகளில் பட்டாசுகளை வைத்திருந்தனர்.

    பட்டாசு வெடித்தபோது அதன் தீப்பொறி பிரபு, முத்துமுனியாண்டி கையில் வைத்திருந்த பட்டாசு மீது விழுந்தது. அடுத்த நொடியில் தீ பரவி பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு நேற்று பரிதாபமாக இறந்தார். முத்துமுனியாண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அரவக்குறிச்சி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரவக்குறிச்சி:

    மதுரை மாவட்டம், கருப்பம்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது 35). ஆட்டோ டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்(32) மதன்குமார்(24), பழனி(22) ஆகியோரும் ஒரு காரில் மதுரையில் இருந்து கரூரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்தார். 

    கார் மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே உள்ள தகரக்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சோலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×